fbpx

பாஜகவில் 4 நடிகைகள்..!! திமுக பேச்சாளரின் சர்ச்சை பேச்சு..!! குஷ்பூவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட கனிமொழி..!!

திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் இருக்கும் 4 நடிகைகளான குஷ்பூ, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

திமுகவை சேர்ந்த பிரபல பேச்சாளரான சைதை சாதிக், ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், நடிகை குஷ்பூ இது தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரை பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள். முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார்.

பாஜகவில் 4 நடிகைகள்..!! திமுக பேச்சாளரின் சர்ச்சை பேச்சு..!! குஷ்பூவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட கனிமொழி..!!

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள கனிமொழி, ”ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. எனது தலைவர் ஸ்டாலினின் காரணமாக இச்சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்” என பதிவிட்டுள்ளார்.

பாஜகவில் 4 நடிகைகள்..!! திமுக பேச்சாளரின் சர்ச்சை பேச்சு..!! குஷ்பூவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட கனிமொழி..!!

இந்நிலையில், வருத்தம் தெரிவித்த கனிமொழிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்” என பாராட்டியுள்ளார்.

Chella

Next Post

டிகிரி முடித்த நபர்களா நீங்க…? ரூ.20,000 ஊதியம்... இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிமுகம்…!

Fri Oct 28 , 2022
இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Faculty & Financial Literacy Counsellor பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 10 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 3 […]
job Vacancy..!! இந்தியன் வங்கியில் சூப்பர் வேலை..!! விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்கிருச்சு..!!

You May Like