43 வயது பெண் இருவர் தனது மகளின் மாமனாருடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் படாவுனைச் சேர்ந்த மம்தா என்ற பெண், தனது மகளின் மாமனார் சைலேந்திரா என்ற பில்லுவுடன் ஓடிப்போனதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. லாரி டிரைவர் என்பதால் மாதத்திற்கு 2 முறை மட்டுமே வீட்டிற்கு வருகிறேன். அப்போது, எனது மனைவி சம்மந்தியை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருக்கிறார் என மம்தாவின் கணவர் சுனில் குமார் தெரிவித்துள்ளார். அதோடு, சைலேந்திரா தங்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் தன்னை வேறு அறையில் படுக்கும்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மம்தா – சுனில் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் ஒருவரான மகளுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, தனது மகளின் மாமானார் சைலேந்திரா (46) உடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், ‘வெளியூர்களுக்கு லாரி ஓட்டுச் செல்லும் தான் அவ்வப்போது வீட்டிற்கு பணத்தை அனுப்பி வந்தேன். ஆனால், சைலேந்திராவை வீட்டிற்கு அழைத்து எனது மனைவி உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்துடன் இருவரும் ஓடிவிட்டார்கள் என்று சுனில் குமார் புகாரளித்துள்ளார்.
வாரத்தின் ஒவ்வொரு 3-வது நாளும் தனது தாய் சைலேந்திராவை வீட்டிற்கு அழைப்பார் என்று மம்தாவின் மகன் தெரிவித்திருக்கிறார். சைலேந்திரா உறவினர் என்பதால் அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதால், நாங்கள் சந்தேகப்படவில்லை என்றும் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். நள்ளிரவில் அங்கு வரும் சைலேந்திரா அதிகாலையில் மம்தா வீட்டில் இருந்து சென்று விடுவார் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், கணவர் சுனில் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.