fbpx

வாரத்தில் 4 நாட்கள் வேலை.. சோதனை திட்டம் வெற்றி.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்..

“வாரத்தில் 4 நாள் வேலை..” சோதனை திட்டம் இங்கிலாந்தில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

கோவிட் தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள பணியிடங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அமல்படுத்தின. எனினும் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, மீண்டும் அலுவலகத்தில் வேலை செய்யும் முறையை பல நிறுவனங்கள் அமல்படுத்தின.. இதனிடையே பல நிறுவனங்கள் எதிர்காலத்திற்காக தங்கள் பணி முறையை நிரந்தரமாக மாற்ற முடிவு செய்தன.

அந்த வகையில் கடந்த ஆண்டு பிரிட்டனில் உள்ள பல நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் திட்டத்தை சோதனை முறையில் தொடங்கின.. இந்த திட்டத்தில் தொழிலாளர்களின் ஊதியம் குறைக்கப்படாது எனவும், அவர்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.. கார்ப்பரேட் உற்பத்தித்திறன் மற்றும் ஊழியர்களின் நலனில் குறைக்கப்பட்ட வேலை நேரத்தின் தாக்கம், சுற்றுச்சூழல் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்ய சோதனை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது..

இந்த திட்டத்தின் படி, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் வாரத்திற்கு 35 மணிநேரம் வரை வழக்கமான வேலைகளைச் செய்தனர்.. அந்த 35 மணிநேரம் என்பது 5 நாட்களுக்குப் பதிலாக 4 நாட்களாகப் பிரிக்கப்பட்டது.. மேலும் பிரிட்டன் முழுவதிலும் உள்ள 61 நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள், ஜூன் மற்றும் டிசம்பர் 2022க்கு இடைப்பட்ட நான்கு நாட்களில் சராசரியாக 34 மணிநேரம் பணிபுரிந்துள்ளனர். இந்த சோதனை முடிவடைந்த நிலையில், 4 நாள் வேலை வாரம் இங்கிலாந்தில் உள்ள ஊழியர்களால் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.. அதில், 56 நிறுவனங்கள், அதாவது 92% நிறுவனங்கள், வாரத்தில் 4 நாள் வேலை முறையை தொடர விரும்புகின்றன.. அவற்றில் 18 நிரந்தரமாக அதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.

தினசரி உங்கள் அலுவலகத்திற்கு நீண்ட தூரம் பயணிப்பவரா நீங்கள்..? அப்படினா இது உங்களுக்குதான்..!!

நிதி நிறுவனமான ஸ்டெல்லர் அசெட் மேனேஜ்மென்ட் முதல் டிஜிட்டல் உற்பத்தியாளர் ரிவெலின் ரோபாட்டிக்ஸ் வரை பல்வேறு துறைகளில் மொத்தம் 2,900 ஊழியர்கள் இந்த சோதனை முறையில் வேலை செய்தனர்.. இதனால் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற கொள்கையின் விளைவாக ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று தரவுகள் காட்டுகின்றன.. மேலும் ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை மேம்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ” 4 நாள் வேலை வாரத்தை நோக்கிய இயக்கத்திற்கு இது ஒரு பெரிய திருப்புமுனை தருணம்” என்று இந்த திட்டத்தின் பிரச்சாரத்தின் இயக்குனர் ஜோ ரைல் தெரிவித்துள்ளார்.

Maha

Next Post

'Play Boy'யாக மாறிய காதலன்..!! மனவேதனையில் நர்சிங் மாணவி எடுத்த முடிவு..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Wed Feb 22 , 2023
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், கோதாவரி தெருவைச் சேர்ந்தவர் மாலினி. இவரது மகள் கவிதா அதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு அதே கல்லூரியில் படித்து வந்த சக மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக கவிதாவுடன் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கவிதாவிடம் பேசுவதை காதலன் தவிர்த்து வந்துள்ளார். இதுபற்றி காதலனிடம் கேட்ட கவிதா, வேறு […]

You May Like