தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து சுட்டெரித்து வருகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரவு 7 மணிவரை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : நண்பன் மறைவு..!! மனமுடைந்துபோன ரஜினி..!! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?