fbpx

6 நாட்களில் 4 கொடூர கொலைகள்.. சைக்கோ இளைஞரின் பகீர் பின்னணி…

மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 6 நாட்களில் 4 காவலாளிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தின் சாஹர் மாவட்டத்தில் 3 காவலாளிகளும், போபால் மாவட்டத்தில் ஒரு காவலாளியும் கொல்லப்பட்டார். கடந்த 28-ம் தேதி இரவு கல்யாண் லொட்ஹி (வயது 50) என்ற காவலாளி சுத்தியலால் அடித்துக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 29-ம் தேதி இரவு கல்லூரியில் காவலாளியாக வேலை செய்துவந்த ஷம்பு நாரயண் துபே (வயது 60) என்ற நபர் கல்லால் அடித்துக்கொல்லப்பட்டார்.

இதற்கு அடுத்து 30-ம் தேதி இரவு மங்கல் அஹிர்வார் என்ற காவலாளி கட்டையால் அடித்துக்கொல்லப்பட்டார். தொடர்ந்து கடந்த1-ம் தேதி இரவு சோனு வர்மா (வயது 23) என்ற காவலாளி கல்லால் அடுத்துக்கொல்லப்பட்டார்.

6 நாட்களில் 4 காவலாளிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மத்தியபிரதேசத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் 6 நாட்களில் 4 கொலைகள் செய்த 18 வயதான ஷிவ்பிரதாப் துருவ் என்ற ‘சைக்கோ’ இளைஞரை கைது செய்தனர்.

சாஹர் மாவட்டம் கிக்ரா கிராமத்தை சேர்ந்த ஷிவ்பிரதாப் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறு வயது முதல் விவரிக்க முடியாத கோபம் கொண்டவராக ஷிவ்பிரதாப் இருந்துள்ளார். மேலும், பள்ளியிலும், கிராமத்திலும் அவருக்கு நண்பர்கள் என யாரும் இல்லாமல், தனிமையிலேயே இருந்துள்ளார்.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற ஷிவ்பிரதாப் மகாராஷ்டிரா மற்றும் கோவா நகரங்களுக்கு சென்று வேலை செய்துள்ளார். அவ்வப்போது தனது கிராமத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 11-ம் தேதி ரக்‌ஷாபந்தன் அன்று வீட்டிற்கு வந்த ஷிவ்பிரதாப் தனது தாய் சீதாபாயிடம் ‘நான் விரைவில் பிரபலமடையப்போகிறேன்’ என கூறியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். 6 நாட்களில் 4 காவலாளிகள் கொடூர கொலை செய்த சைக்கோ கொலையாளி ஷிவ்பிரதாப்பிடம் போலீசார் தொடர்ந்து விசாராணை நடத்தி வருகின்றனர்.

Maha

Next Post

பருத்திவீரன் புகழ் குட்டி சாக்குவை ஞாபகம் இருக்கா..? இப்ப என்ன செய்றாரு தெரியுமா..?

Sat Sep 3 , 2022
அறிமுகமான முதல் படத்திலேயே மக்களின் வரவேற்பை பெற்ற நடிகர்களில் கார்த்தியும் ஒருவர்.. 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.. விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்றை பெற்ற இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்றது.. பிரியா மணி கதாநாயகியாக நடித்த இப்படத்தில் பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. பருத்தி வீரன் படத்தில் குட்டி […]

You May Like