சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு
சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.
ஆதார் – பான் இணைப்பு :
ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 ஆகும். இணைக்காதவர்களின் பான் எண் இன்று முதல் செயலிழந்துவிடும் .
TCS கட்டணம்:
வெளிநாட்டில் உள்ள கிரெடிட் கார்டு செலவுகளை TCS உட்படுத்தப்படும், புதிய விதி அமல்படுத்தப்படும். அதாவது 7 லட்சத்துக்கும் மேலான செலவினங்களுக்கு 20% வரை TCS கட்டணம் விதிக்கப்படும்.
வருமான வரி கணக்கு தாக்கல்:
ஒவ்வொரு வரி செலுத்துபவரும் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் நெருங்குகிறது. உங்கள் ஐடிஆரை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றால், ஜூலை 31 ஆம் தேதிக்குள் அதை முடிக்கவும்.