fbpx

அந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஒரே நேரத்தில் 4 அமைச்சர்கள் ராஜினாமா..!! அரசியலில் பெரும் பரபரப்பு..!!

ஜப்பான் நாட்டு அமைச்சரவையில் அமைச்சர்கள் 4 பேர் திடீரென ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஜப்பான் நாட்டு அமைச்சரவையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிதி சேகரிப்பின்போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால், அதில் சம்பந்தப்பட்ட 4 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுப்பேற்று அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் ஜப்பானிய ஆளும் கட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளாக சுமார் 500 மில்லியன் யென் கணக்குகளில் இவர்கள் வைப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர்களின் மோசடியை அடுத்து பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அரசாங்கத்தின் செல்வாக்கு அந்த நாட்டில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் நான்கு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதால், ஜப்பான் அரசு மற்றும் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Chella

Next Post

CSK கேப்டன் தோனி தொடர்ந்த வழக்கு.! தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை.! ஹை கோர்ட் அதிரடி தீர்ப்பு.!

Fri Dec 15 , 2023
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவருக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓனர் குருநாத் மெய்யப்பன் சம்பந்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தோனியின் மீது அவதூறு சுமத்தியது தொடர்பாக ஜீ […]

You May Like