fbpx

ஜம்மு – காஷ்மீர் என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!. 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

Terrorists Killed: ஜம்மு காஷ்மீர், குல்காம் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயமுற்றார். பின்னர் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

என்கவுன்டர் நடந்த இடத்தின் ட்ரோன் காட்சிகள் அங்கு நான்கு உடல்கள் கிடப்பதைக் காட்டுகின்றன, ஆனால் துப்பாக்கிச் சூடு இன்னும் நடந்து கொண்டிருப்பதால் அவற்றை இன்னும் மீட்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் வீரமரணமடைந்தனர்.

Readmore: யூரோ 2024!. அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள்!.

English Summary

4 terrorists killed in Jammu-Kashmir encounter! 2 soldiers martyred!

Kokila

Next Post

கூட்டுறவுச் சங்கங்களுக்கு 15% வரிச் சலுகை...!

Sun Jul 7 , 2024
Concessional Tax Rate for New Producer Co-operative Societies Income tax concession has been given to Co-operative Societies.

You May Like