தமிழ்நாட்டில் தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மலேரியா
காய்ச்சல், குளிர், தலைவலி, குமட்டல், வாந்தி உள்ளிட்டவை மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த சமயத்தில், காரமான உணவுகளை குறைத்து நீர்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. கொசு ஒழிப்பே, இந்த காய்ச்சல்களில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சல்
காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாக கருதப்படுகிறது. இனிப்பு சுவையுள்ள உணவுகளைக் குறைத்து, பாகற்காய் உள்ளிட்ட கசப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.
இன்ஃப்ளூயன்சா
இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளாக மூச்சு திணறல், நெஞ்சுப் பகுதியில் வலி, தலைசுற்றல், வலிப்பு போன்றவை சொல்லப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஒமைக்ரான்
தமிழகத்தில் மீண்டும் ஒமைக்ரான் வகை வைரஸ் பரவி வருகிறது. காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியா்த்தல், உடல் வலி இருந்தால் ஒமைக்ரான் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், கூட்டமான இடங்களை தவிர்ப்பது போன்றவற்றை கடைபிடிப்பது நல்லது.