ஃபைசரின் (Pfizer’s) தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற 40% கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது
கொரோனாவுக்கான ஃபைசரின் MRNA தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற 40% கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் கீழ் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபைசரின் உள் ஆவணங்களின்படி, கொரோனா தடுப்பூசியின் சோதனையில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் கருச்சிதைவுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியான செய்தி குறித்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்கின்றன என்று ட்வீட் செய்துள்ளார். கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் மீது இந்தியா நம்பிக்கை வைத்தது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற 50 கர்ப்பிணிப் பெண்களில் 22 பேர் தங்கள் குழந்தைகளை இழந்ததாக ஃபைசர் வெளியிட்ட ஆவணங்கள் காட்டுகின்றன. எழுத்தாளரும் பத்திரிகையாளருமான டாக்டர் நவோமி வுல்ஃப் இதை கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது, ஃபைசர் தனது கொரோனா தடுப்பூசியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியது. நிறுவனத்துக்கும் அரசுக்கும் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஆகஸ்ட் 2021 இல் மோடி அரசாங்கம் ஃபைசருக்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.