விற்பனை குறைவு, வருவாய் இழப்பு போன்ற சிக்கலில் தவித்து வரும் பிலிப்ஸ் நிறுவனம், தனது 4,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி நிறுவனம் பிலிப்ஸ் (Philips). இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாவே கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த மருத்துவ கருவிகளில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டு சந்தையில் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நிறுவனம் 1.3 பில்லியன் யூரோ. அதாவது இந்திய மதிப்பில் 10,500 கோடிக்கு ரூபாய்க்கு மேலாக நஷ்டம் கண்டுள்ளது. நிறுவனத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு பொறுப்பேற்று அந்நிறுவனத்தின் சிஇஓ பதவியை பிரான்ஸ் வான் ஹூடன் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் புதிய சிஇஓவாக ராய் ஜாகோப்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.
![4 ஆயிரம் ஊழியர்களின் வேலையை பறித்த பிலிப்ஸ் நிறுவனம்..!! திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/company-contacts-masthead_M.jpg)
ராய் பொறுப்புக்கு வந்தவுடனே, அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். விற்பனை குறைவு, வருவாய் இழப்பு போன்ற சிக்கலில் தவித்து வரும் நிறுவனத்தை சீரமைக்கும் விதமாக 4,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். போட்டி நிறைந்த சூழலில் லாபத்தை ஈட்ட இதுபோன்ற நடவடிக்கை தேவை எனவும் வருத்தத்திற்கு உரியது என்றாலும் இதை தவிர்க்க முடியாது என்று கூறியுள்ளார். அந்நிறுவனத்தில் மொத்தம் 80,000 பேர் வேலை செய்துவரும் நிலையில், அதில் 4,000 பேரை வேலை நீக்கம் செய்ய புதிய சிஇஓ முடிவெடுத்துள்ளார்.
![4 ஆயிரம் ஊழியர்களின் வேலையை பறித்த பிலிப்ஸ் நிறுவனம்..!! திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/Marketing-Strategy-of-Philips-1-1024x683.jpg)
கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற சர்வதேச நிகழ்வுகளின் தாக்கத்தின் எதிரொலியாகவே நிறுவனம் நெருக்கடியை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.