162 பெண் கைதிகள் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோ நாட்டின் கோமா நகரை எம்23 என்ற தீவிரவாத குழுக்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கைப்பற்றியது. இதனால், அந்நாட்டு ராணுவத்திற்கும், தீவிரவாத குழுக்களுக்கும் இடையே நடந்த சண்டையில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்பு சண்டையும் முடிவுக்கு வந்தது. முன்னதாக ஏற்பட்ட மோதலின் போது கோமா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண் கைதிகள் தப்பிச் சென்றனர்.
கைதிகள் தப்பிச் செல்லும் முன்பாக பெண்கள் சிறையில் இருந்த 150-க்கும் மேற்பட்ட கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து சிறைக்கு தீவைக்கப்பட்டதில், 165 பெண் கைதிகளில் பெரும்பாலானோர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் கைதிகள் அனைவரும் தீவைத்து எரிக்கப்பட்டனர். ஒன்பது முதல் 13 பெண் கைதிகள் மட்டுமே உயிருடன் தப்பியுள்ளனர்.
ஆனால், அவர்களும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் உள்நாட்டு நீதித்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ஆனால், ஐ.நா.வின் புள்ளி விபரங்கள் சரியானதாக உள்ளது. ஆண் கைதிகள் தப்பியோடி விவகாரத்தில் சிறைக் காவலர்களும் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். சம்பவத்தன்று மட்டும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். தற்போது, சிறை முழுவதும் காலியாக உள்ளது. இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.