fbpx

நியாயவிலைக்கடைகளில் 4,000 காலிப் பணியிடங்கள் நிரப்ப உத்தரவு …

நியாய விலைக்கடைகளில் உள்ள 4,000 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிமுறையின்படி 5 உறுப்பினர்கள் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் ஆ்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு ஆட்சியரால் இந்த பணிக்கான ஆட்கள் நியமனம் செய்யப்படுவார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 4000 காலிப் பணியிடங்கள் உள்ளன. கட்டுநர், விற்பனையாளர் பணிக்கான இடங்களை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் ஆள் தேர்வு செய்யப்படுவதற்கான சரிபார்ப்பு குழுவில் மாவட்ட வழங்கல் அலுவலர் நியமனம் செய்யப்படும் வட்ட வழங்கல் அலுவலர் உறுப்பினராக இருப்பதால் , அலுவலர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் சரிபார்ப்பு குழுவின் பணிகளில் ஈடுபட்ட ஒத்துழைக்க மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

சரிபார்ப்பு பணிகளுக்்கு அதிக எண்ணிக்கையில் அலுவலர்கள் தேவைப்படுவார்கள் எனவே ஊரக வளர்ச்சித்துறை வருவாய் அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அந்தந்த துறைகளின் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இந்த தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணபிக்க கூடும் எனவே எந்த புகாரும் இல்லாமல் நடத்த பல்வேறு அரசு துறைகளும் ஒத்துழைப்பு உதவிகளும் வழங்க வேண்டு் என நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் பாதுகாப்பு வசதிகள் செய்துத்தர மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர்கள் மற்றும் நட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த சான்றுகள் , ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட வேண்டும். தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடம் ஏற்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலிப்பணியிடம் ஏற்படக்கூடும் நாளில் 90 நாட்களுக்கு முன்னரும் காலிப்பணியிடங்களுக்கான விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களில் இருந்து பெற வேண்டும்.

மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் அரசு பணியிடங்களுக்கு பின்பற்றப்படும் 200 புள்ளி இனச்சுழற்சி இட ஒக்கீட்டு விதிகள் , முன்னுரிமை மற்றும் இதர நெறிமுறைகள் தொடர்பான நடைமுறையில் உள்ள அரசாணைகள் சட்டப் பிரிவுகள் , விதிகள் ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். நியாயவிலைக்கடை, விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்ல அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர் பணியிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Post

’செய்வினையால்தான் எனக்கு கல்யாணம் நடக்கல’..!! கோலமிட்ட மூதாட்டியை கொன்று சாய்த்த நபர்..!!

Wed Sep 28 , 2022
செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என நினைத்து மூதாட்டியைக் கொலை செய்தவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஒத்தக்குதிரை, கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 88 வயதான சரஸ்வதி. இவருக்கு 70 வயதில் சுகுமார் என்ற மகனும், 68 வயதில் ராதா என்ற மகளும் உள்ளனர். சுகுமார் கோபி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் வசித்து வருகிறார். கணவர் […]

You May Like