இந்தியா முழுவதும் தபால் நிலையங்களில் உள்ள 40,889 GDS பணிகளுக்கு தேர்வு தேர்வானோரின் தகுதிப்பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10ஆம் வகுப்புத் தேர்வில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை கட்டாயப் பாடங்களாகவோ அல்லது விருப்பப் பாடங்களாகவோ எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 3 ஆயிரத்து 1267 காலிப்பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.