fbpx

Exam: 4,107 தேர்வு மையங்கள்… தமிழகம் முழுவதும் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்…!

தமிழகம் முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடக்கம்.

தமிழகம் முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடக்கம். இன்று முதல் ஏப்ரல் 8 வரை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு 4,107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 12-22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். மே 10-ம் தேதி ரிசல்ட் வெளியாகிறது.

முதலில் மொழி பாடமான தமிழ் தேர்வு நடைபெற உள்ளது. பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையோ, தனியார் பள்ளிகளின் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்களையோ முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது.

மேலும் தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் தினத்தன்று சம்பந்தப்பட்ட பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Vignesh

Next Post

Income | ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக உயரப்போகிறது..!! மத்திய அரசு எடுத்த மாஸ் முடிவு..!!

Tue Mar 26 , 2024
இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை, வாழ்நாள் ஊதியமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ.,வை உருவாக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சர்வதேச அளவில் தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்படுகிறது. சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்திற்கு ஐ.எல்.ஓ. ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, தற்போது தொழிலாளர்கள் வாங்கி வரும் குறைந்தபட்ச ஊதியம் என்பதற்கு […]

You May Like