fbpx

உத்தரகண்ட் சிறையில் 44 கைதிகளுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு உறுதி.. அதிர்ச்சி தகவல்…

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..

ஹல்ட்வானியில் உள்ள சிறையில் ஹெச்ஐவி-பாசிட்டிவ் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது சிறை நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுசீலா திவாரி மருத்துவமனையின் மருத்துவர் பரம்ஜித் சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. டாக்டர் சிங் இதுகுறித்து பேசிய போது “ ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்காக ஏஆர்டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையம் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, எனது குழு சிறையில் உள்ள கைதிகளை தொடர்ந்து பரிசோதித்து வருகிறது.

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட எந்த கைதிக்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன” என்று தெரிவித்தார். தற்போது அந்த சிறையில் 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர்.. அதிக எண்ணிக்கையிலான கைதிகளுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், சிறை நிர்வாகமும் கைதிகளின் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

Maha

Next Post

"நடுங்க வைக்கும் கொடூரம்....." 10 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் களிமண் திணித்து சித்திரவதை! போக்சோ பாய்ந்தது!

Mon Apr 10 , 2023
பீகார் மாநிலத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரது பிறப்புறுப்பில் களிமண்ணை அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமி தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சார்ந்த 26 வயது இளைஞர் […]

You May Like