செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்வுகளை வெளியிட காட்சி ஊடகம் & ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சென்னை மாமால்லபுரத்தில் நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பொதுப்பிரிவில் 189 அணிகள் மற்றும் 154 பெண்கள் அணிகளும் பதிவு செய்தனர். போட்டிக்கு மொத்தமாக 187 நாடுகளில் இருந்து பதிவு செய்தனர். ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தினமும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு, வீரர்-வீராங்கனைகள் உற்சாகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கான உணவுகளும் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட் 9ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான நிறைவு விழா நடைபெற இருக்கிறது. ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா உலகளவில் பேசப்பட்ட நிலையில், நிறைவு விழாவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நிகழ்வுகளை வெளியிட காட்சி ஊடகம் & ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.