அக்னிபாத் திட்டம் தொடர்பான தவறான தகவல்களை அளித்ததாக 10 வெவ்வேறு யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ராணுவ வீரர்கள் ஆள்சேர்ப்பு குறித்த அக்னிபாத் திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. அக்னிபாத் திட்டம் என்றால் என்ன ? எவ்வாறு செயல்படும்? இதனால் என்ன பயன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை யூடியூப்கள் வெளியிட்டு வந்தன. இந்நிலையில் தவறான தகவலை வழங்கிவிட்டதாக மத்திய அரசு 45 வீடியோக்களுக்கு தடை விதித்துள்ளது.
தவறான தகவல் அனுப்பியதன் அடிப்படையிலும் தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தின் வாயிலாகவும் யூடியூப் வீடியோக்கள் அகற்றப்பட்டதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/யூடியூப்.jpg)
அக்னிபாத் திட்டம் , இந்திய ஆயுதப்படைகள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு எந்திரம் , காஷ்மீர் போன்றவற்றுடன் தொடர்புடைய தகவல்களை பரப்புவதற்கு அமைச்சகம் ஏற்கனவே தடை விதித்திருந்த வீடியோக்களும் இதில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. தேசிய பாதுகாப்புமற்றும் வெளிநாடுகள் உடனான இந்தியாவின் நட்புறவு ஆகியவற்றின் அடிப்பயைில் தவறானாதாக கருதப்பட்டது.
தடை செய்யப்பட்ட அல்லது நீக்கப்பட்ட இந்த வீடியோக்கள் சுமார் ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டியுள்ளது. இது மக்களிடையே தவறான கண்ணோட்டத்தை கொண்டு சேர்க்கும் அத்துடன் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு மக்களிடையே தவறான கருத்துக்களை சென்றடைய வைக்கும். எனவே தகவல் தொழில்நுட்ப விதி 2021ன் படி வீடியோக்களை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
யூ டியூப் உள்ளடக்கத்தில் மத சமூகங்களிடையே வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் போலியான செய்திகளை பரப்பியுள்ளது. மார்ப் செய்யப்பட்ட வீடியோக்களையும் இந்த யூடியூப்கள் வெளியிட்டுள்ளன. மத உரிமைகளை அரசாங்கம் பறித்தது போன்ற தவறான தகவல்களை யூடியூப்கள் பரப்பி உள்ளது. இது மிகப் பெரிய வன்முறையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல தடை விதிக்கப்பட்ட யூடியூப் வீடியோக்களை வெளியிட்டது. இந்த யூடியூப்கள்உள்ளடகத்தை வெளியிடும் போது வகுப்புவாதம் தவறான தகவல்கள், போன்ற சென்சிட்டிவ் உள்ளடக்கத்தை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அப்படி மீறினால் காட்டுத் தீ போல அந்த தகவல் பரவி கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் . எனவே இது போன்ற நடவடிக்கைகள் அரசுக்கு உதவியாகவும் யூடியூப்பை கண்காணிக்கவும் உதவியாக இருக்கும். என குறிப்பிடப்பட்டுள்ளது.