ரூ.1,000 மகளிர் உரிமை தொகையை பெற பயனாளிகளுக்கு தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மேல் உள்ளவருக்கு ரூ.1,000 கிடையாது. ஆண்டுக்கு 2.50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறும் குடும்பத் தலைவிக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது என அரசு தெரிவித்துள்ளது. அதே போல 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பெண் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. எந்த ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்த ரேஷன் கடையில் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.