fbpx

ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகளை பதம் பார்க்க அழைத்து வந்த 5 அழகிகள்..!! ரகசிய தகவலால் போலீஸ் வலையில் சிக்கிய 14 பேர்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை, சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், வார விடுமுறையில் விடுதிகளில் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு ஓய்வெடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு தனியார் தங்கும் விடுதிகளில் வெளி மாநிலப் பெண்களை புரோக்கர்கள் மூலம் அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக திருப்பத்தூர் டிஎஸ்பி ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் தலைமையிலான போலீசார் அத்தனாவூர், நிலாவூர், கோட்டூர், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் விடுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது படகிலத்திற்கு செல்லும் பாதையில் உள்ள பி.எச் மற்றும் ஆர்யா நிலாவூர் சாலையில் உள்ள சில்வர்வுட் என்ற 3 தனியார் விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 பெண்கள், ஹோட்டல் விடுதியின் மேலாளர்கள் உள்ளிட்ட 9 ஆண்கள் என 14 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, 9 ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விடுதியில் மீட்கப்பட்ட 5 பெண்களும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். ஏலகிரி மலையில் தொடர்ந்து தனியார் விடுதிகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திடீரென நடந்த சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களையும் அதற்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் என 14 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! அனைத்து விவரங்களும் இனி உங்கள் கையில்..!! உடனே இந்த வேலையை முடிங்க..!!

English Summary

Tirupattur DSP Jaganathan received confidential information that out-of-state girls were being brought to various private hostels in Elagiri hill through brokers and engaged in sex work.

Chella

Next Post

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 30 சதவீத மானியம்...! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்...?

Tue Oct 8 , 2024
One can apply and avail the loan under the Chief Minister's Saving Hands scheme.

You May Like