எல்பிஜி சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP, காப்பீட்டு பெற KYC கட்டாயம் உள்ளிட்ட நான்கு முக்கிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது.
எல்பிஜி சிலிண்டர் பெற OTP கட்டாயம்
எல்பிஜி சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தினம்தோறும் எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இனி இதனை முன்பதிவு செய்யும் போது, நுகர்வோர் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP எண் வரும். சிலிண்டர்கள் டெலிவரி செய்யும் போது OTP கொடுத்தால் மட்டுமே டெலிவரி செய்யப்படும்.
மின்சார மானியத்திற்கான புதிய விதிகள்
மின்சார மானியத்திற்கான புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்த மாதத்திற்கான மின் மானியத்திற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாளாக முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் அறிவித்திருந்தார். மானியத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் மானியம் இல்லாத பில்களை செலுத்த வேண்டும், ஆனால் அடுத்த மாதம் விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறியிருந்தார். டெல்லியில் 58 லட்சம் வீட்டு மின் நுகர்வோர் உள்ளனர், அவர்களில் 47 லட்சம் பேர் மானியத்தைப் பெறுகின்றனர்.
GST மாற்றம்
இன்று முதல், வரி செலுத்துவோர் 5 கோடி ரூபாய்க்கும் குறைவான ஜிஎஸ்டி ரிட்டனில் நான்கு இலக்க HSN குறியீட்டை வழங்குவது கட்டாயமாகும்.
காப்பீட்டு பெற KYC கட்டாயம்
காப்பீட்டு கோரிக்கைகளுக்கு KYC கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 2022-ம் ஆண்டு இன்று முதல் உடல்நலம் மற்றும் பொது காப்பீட்டிற்கு KYC சரிபார்ப்பு கட்டாயம் என கூறியுள்ளது.