fbpx

பொதுமக்கள் கவனத்திற்கு…! இன்று முதல் அமலுக்கு வரும் 5 மாற்றம்…! உடனே இதை செய்து முடிக்க வேண்டும்….!

இலவச ஆதார் புதுப்பிப்பு

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடுவை ஜூன் 14 முதல் செப்டம்பர் 14, 2023 வரை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பித்து 10 வருடங்கள் ஆகிவிட்டால், நீங்கள் இப்போது ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

பான்- ஆதார் இணைப்பு:

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் பலர் இதனை இணைக்காமல் உள்ளதால் மத்திய அரசு தொடர்ந்து இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வருகிறது. பான்- ஆதார் இணைக்காத அவர்களின் வங்கி கணக்குகள் செப்டம்பர் 30-ம் தேதிக்கு மேல் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டு மாற்றம்;

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றது. இந்த நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற நான்கு மாத கால அவகாசம் வழங்கியது. அதன்படி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்த நோட்டுகளை மாற்ற வேண்டும். இந்த நோட்டுகளை மாற்ற இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது என்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக வங்கிகளை சென்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

சம்பள விதிகளில் மாற்றம்:

இன்று முதல், அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் சம்பள விதிகள் மாற்றப்பட உள்ளன. இந்த புதிய விதிகளின்படி, வீட்டு வாடகை அதிகரிக்கும். சம்பளத்தில் சிறிது பிடித்தம் செய்யப்படும். இன்று முதல் வாடகையில்லா தங்குமிடம் தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை ;

இந்த மாதம் வங்கிகளுக்கு 16 நாட்கள் முழு விடுமுறை என்பதால், அதற்கேற்ப உங்கள் வேலைகளை திட்டமிட வேண்டும்.

Vignesh

Next Post

மாதம் ரூ.77,000 சம்பளம்!… பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலை!… முழு விவரம்!

Fri Sep 1 , 2023
மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் அதிகாரி, ஜூனியர் அலுவலர், மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் (வேளாண்மை), பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்), பயிற்சியாளர் (க்வாலிட்டி கன்ட்ரோல்), பயிற்சியாளர் (ஸ்டெனோகிராஃபர்), பயிற்சியாளர் (வேளாண் ஸ்டோர்ஸ்) உள்ளிட்ட 89 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like