ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். அந்த வகையில் வரும் ஏப்ரல் மாதத்தில் 15 விடுமுறை நாட்கள் உள்ளன.. இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், விடுமுறை நாட்களை மனதில் வைத்து உங்கள் வேலையைத் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கிகள் மாதத்தின் முதல் மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் இயங்கி வருகின்றன, அதே நேரத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாகக் கருதப்படுகின்றன. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த வாரம் மகாவீர் ஜெயந்தி, பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள், புனித வெள்ளி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்..
இந்த வாரத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் :
- ஏப்ரல் 4, 2023 (செவ்வாய்) – மகாவீர் ஜெயந்தி – அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, சண்டிகர், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ ஆகிய இடங்களில் விடுமுறை
- ஏப்ரல் 5, 2023 (புதன்கிழமை) – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் (தெலங்கானாவில் விடுமுறை)
- ஏப்ரல் 7, 2023 (வெள்ளிக்கிழமை) – புனித வெள்ளி ) ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், ஹைதராபாத் – ஆந்திரப் பிரதேசம், ஹைதராபாத் – தெலுங்கானா, இம்பால், கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர் ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் விடுமுறை).
- ஏப்ரல் 8, 2023 (சனிக்கிழமை) – மாதத்தின் 2வது சனிக்கிழமை
- ஏப்ரல் 9, 2023 (ஞாயிறு) – விடுமுறை
எனினும் இந்த விடுமுறை நாட்கள் வங்கி வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம், ஏனெனில் ஆன்லைன் இணைய வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.. வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து பணத்தை டெபாசிட் செய்யவோ எடுக்கவோ முடியாது என்றாலும், மற்ற இணைய சேவைகளை எந்த சிரமமும் இன்றி பெற முடியும். விடுமுறை காலத்தில் நெட் பேங்கிங் மற்றும் பிற ஆன்லைன் பரிவர்த்தனைகள் தொடர்ந்து செயல்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.