fbpx

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

தென் தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 11ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கொரோனாவை போல பரவும் வைரஸ்..!! மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு..? வெளியான முக்கிய தகவல்..!!

Tue Mar 7 , 2023
H3N2 வைரஸ் கொரோனா போல பரவி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் உருமாற்றம் அடைந்து கொண்டிருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பருவகால காய்ச்சலை பரப்பி வரும் புதிய வகை H3N2 வைரஸ் நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் காய்ச்சல், சளி, இருமல் என்று மருத்துவமனைகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. […]

You May Like