fbpx

5 நாட்கள் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை

ஆயுதபூஜை , விஜயதசமயை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை கொண்டாடப்படுகின்றது. 2022 ம் ஆண்டிற்கான பொது விடுமுறையின் கீழ் இந்த இரண்டு நாட்களும் ஏற்கனவே பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்மற்றும் தன்னுடன் இணைந்த பிற பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. சனி ஞாயிறு ஏற்கனவே விடுமுறை நாட்களாக உள்ளதால் கூடுதலாக திங்கள் கிழமை 3ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.

இதற்கு பதிலாக சனிக்கிழமை 8ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி , ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை என விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஊருக்கு செல்ல நாள்தோறும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் கூடுதலாக 2050 சிறப்புபேருந்துகள் இயக்கபடுகின்றது. இதேபோல பல நிறுவனங்களும் 5 நாட்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

Next Post

8 பேரால் இரண்டு முறை பாலியல் பலாத்காரம்.. 8ம் வகுப்பு மாணவியை பணம் கேட்டு மிரட்டிய கும்பல்..

Sat Oct 1 , 2022
ராஜஸ்தானில் 8 பேர் கொண்ட கும்பல் 8ம் வகுப்பு மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை. ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதியில் 8ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2021ம் ஆண்டு பாலியல் பலாத்காம் செய்யப்பட்டார். அதை வீடியோவாக எடு்தது வைத்துக் கொண்ட நபர்கள் சிறுமியிடம் பணம்கேட்டுள்ளனர். இல்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் […]

You May Like