fbpx

சிவகங்கை அருகே கடனுக்கு பயந்து தந்தையை கொலை செய்த மகன்….! உடந்தையாக இருந்த மனைவி மகள் உட்பட 5 அதிரடி கைது…..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலை சேர்ந்தவர் உதய கண்ணன் (53) என்பவர் ஒரு மாதத்திற்கு முன்னதாக இவரை காணவில்லை என்று அவருடைய மகள் தாரணி மானாமதுரை காவல்துறையிடம் புகார் வழங்கினார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில், நேற்று காலை மானாமதுரை அருகே உள்ள வேலூர் கிழக்கு பகுதியில் சிவகங்கை சாலை ஓரத்தில் உடலில் காயங்களுடன் உதய கண்ணன் உயிரிழந்து கிடந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளும் அருகிலேயே கிடந்தது.

இது தொடர்பாக மானாமதுரை சிப்காட் காவல் துறையினர் விசாரித்து வந்தனர். இதில் உதய கண்ணனை அவருடைய 17 வயது மகன் மற்றும் நண்பர்கள் லாடனேந்தலை சேர்ந்த சூரிய பிரசாந்த்(19), மணிகண்டன் (19) உள்ளிட்டோர் இணைந்து நேற்று முன்தினம் இரவு உருட்டு கட்டையால் அவரைத் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதோடு வளைந்து ஒரே கண்ணனின் மனைவி புஷ்பலதா (42), மகள் தாரணி (22) உள்ளிட்டோரும் உதவியாக இருந்துள்ளனர் இதனை தொடர்ந்து காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ஒரே கண்ணனுக்கு அதிக அளவில் கடன் தொல்லை இருந்திருக்கிறது கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி வழங்கியதால் உதயகண்ணன் ஒரு மாதத்திற்கு முன்னரே தலைமறைவாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் தான் அவரை கொலை செய்தால் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு கொடுக்க மாட்டார்கள் என்று அவருடைய மகன் கருதி இருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக, தலைமறைவாக இருந்த உதயக்கண்ணனை வேலூர் பகுதிக்கு வரவழைத்து அவரை கொலை செய்திருக்கிறார்கள். அதோடு அருகிலேயே அவருடைய மோட்டார் சைக்கிளை சாய்த்து போட்டு விபத்தில் இருந்ததைப் போல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால் உயிரிழந்த விதத்தை பார்த்தபோது அது கொலை தான் என்பது தெரியவந்துள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த கொலைக்கு உதயகண்ணனின் மனைவி மற்றும் மகளும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். உதய கண்ணனின் மகன் தன்னுடைய நண்பர்களுடன் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்னதாக மானாமதுரை மூங்கில் ஊரணி பகுதியில் ஒரு வீட்டுக்குள் புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்களிடம் நகை பணம் முடித்தவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Post

1 கோடி ரூபாய் பணத்திற்காக கடத்தப்பட்ட வங்கி அதிகாரியின் படுகொலை…..! நண்பர்களால் நிகழ்ந்த கொடூரம்…..!

Sat May 27 , 2023
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த மூத்த வங்கி அதிகாரி ஒருவரின் மகன் அனுமன் மீனா (31) தனியார் நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி வந்தார். சென்ற திங்கள் கிழமை காலை அலுவலகம் சென்றவர் அங்கிருந்து காணாமல் போனார். இது தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் நகர காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அதற்கு அடுத்த நாள் ஹனுமன் மீனாவின் தந்தைக்கு ஒரு வீடியோ தகவல் வந்தது. அதில் ஹனுமான் மீனா தங்களுடைய […]

You May Like