fbpx

IPL 2024: முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் 5 வீரர்கள்!… யார் யார் தெரியுமா?

IPL 2024: அனைவராலும் எதிர்பார்க்கபட்ட ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் என அருண் துமால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், போட்டி இந்தியாவில் நடைபெறுமா என அனைவருக்கும் சந்தேகம் எழுந்த நிலையில், போட்டிகள் முழுமையாக இந்தியாவிலேயே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நடப்பாண்டு தொடரில் முதல்முறையாக பல வீரர்கள் விளையாடவுள்ளனர். அதாவது 17வது சீசன் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாக இருக்கும் ஐந்து வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஷமர் ஜோசப்: வெஸ்ட் இண்டிஸ் வீரரான ஷமர் ஜோசப் முதல் முறையாக ஐபிஎல் லீக்கில் விளையாடுகிறார். அந்த வகையில், ஷமர் ஜோசப் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாட இருப்பதாக அந்த அணி அறிவித்து இருக்கிறது. இவர் இங்கிலாந்தின் மார்க் வுட்-க்கு மாற்றாக லக்னோ அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷமர் ஜோசப் தனி ஆளாக நின்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் ஆர்டரை முழுமையாக தகர்த்த ஷமர் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸ்-இல் 68 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி கப்பாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி காரணமாக ஷமர் ஜோசப் உலகளவில் பிரபலமான வேகப்பந்து வீச்சாளராக மாறினார். முதல் முறையாக ஐ.பி.எல்.-இல் களமிறங்கும் ஷமர் ஜோசப்-க்கு லக்னோ அணி சார்பில் ரூ. 3 கோடி வழங்கப்படுகிறது.

ஜெரால்ட் கோட்ஸி: ஐபிஎல்லில் நுழையும் மற்றொரு சர்வதேச சூப்பர் ஸ்டார் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி, ரூ. 5 கோடிக்கு வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இவர், நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். முன்னதாக, ஐபிஎல் 2021 இன் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கோட்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அவர் அப்போது விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நந்த்ரே பெர்கர், ஐபிஎல் சீசனில் முதன்முறையாக விளையாடுகிறார். இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது அவர் தனது செயல்பாடுகளால் பலரைக் கவர்ந்தார், அங்கு அவர் 11 விக்கெட்டுகளை எடுத்தார், இதனால், 50 லட்சம் ரூபாய்க்கு பர்கரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்பென்சர் ஜான்சன்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனை, ஸ்பென்சர் ஜான்சனை, குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இவர், KFC BBL|12 சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடினார், இந்த போட்டியில் 19 விக்கெட்டுகளை ஜான்சன் எடுத்தார். ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிக்காக ஜோஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் போன்றோருக்கு எதிராக பந்து வீசியபோது, ​​தி ஹன்ட்ரடில் தனது முதல் போட்டியில் ஜான்சன் 3/1 எடுத்தார்.

ரச்சின் ரவீந்திரா: நியூசிலாந்தின் இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவும் ஐபிஎல் தொடரில் அறிமுகமாக உள்ளார். நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது. 23 வயதான ரச்சின் ரவீந்திரா நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியிலேயே சதமடித்தவர். 9 போட்டிகளில் 565 ரன்களை குவித்து இருந்தார். அதில் 3 சதம் 2 அரைசதம் அடக்கம்.

English summary: 5 players playing in IPL 2024 for the first time

Readmore:பெற்றோர்களே!… நாடுமுழுவதும் மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!… மத்திய அரசு அறிவிப்பு!

Kokila

Next Post

வாகன ஓட்டிகளே!… Driving License புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

Thu Feb 22 , 2024
ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க பிப்ரவரி 29ம் தேதிவரை கால அவகாசத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நீட்டித்துள்ளது. இந்தியாவில் வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகிவிட்டால் அதனை புதுப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், எல்.எல்.ஆர், நடத்துனர் உரிமம் போன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்கும், உரிமத்தை நீட்டிப்பதற்கும் சாரதி என்ற இணையதளம் உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் […]

You May Like