சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது நபர், பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் “லோகேண்டோ” என்ற டேட்டிங் செயலி மூலம், இளம்பெண்களை தன்னுடைய வீட்டுக்கு வரழைத்து உல்லாசமாக இருப்பாராம். அப்படித்தான், 25 வயது இளம்பெண் ஒருவர் இவருக்கு பழக்கமாகியுள்ளார். 3 மணி நேரம் உல்லாசமாக இருப்பதற்கு ரூ.6 ஆயிரம் என்று அந்த பெண்ணிடம் பேரம் பேசியுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தந்துள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, அந்த இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். பிறகு அந்த பெண்ணுக்கு பேசியபடி, ரூ.6 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். பிறகு அந்த வாலிபர் குளிக்க பாத்ரூம் சென்றுவிட்டார். குளித்து முடித்துவிட்டு வந்து பார்த்தால், பெட்ரூமில் உள்ள பீரோ சரியாக மூடாமல் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்தார். பின்னர், பீரோவை திறந்து பார்த்தபோது, துணிகள் கலைந்திருந்தன. அத்துடன், பீரோவில் இருந்த 5 பவுன் மதிப்புள்ள தங்க காசுகளும் மாயமாகி இருந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர், உல்லாசத்திற்கு அழைத்து வந்த பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனால், லோகேன்டோ ஆப் மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த பெண்ணோ, தன்னுடைய அக்கவுண்ட்டை மொத்தமாக டெலிட் செய்துவிட்டு, அந்த செயலியில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் அந்த பெண்ணை தொடர்பு கொள்ளவும் முடியாமல், தவித்துள்ளார். இறுதியாக அசோக் நகர் காவல்நிலையத்தில் விபச்சார பெண் மீது புகாரளித்தார்.
இந்த புகாரின்பேரில், போலீசாரும் அந்த வாலிபரின் வீட்டு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அந்த பெண்ணை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் அந்த பெண் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. போலீசார், அவரை தீவிரமாக தேடி கொண்டிருக்கின்றனர்.
Read More : இவர்களுக்கு இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை..!! மத்திய அரசு அதிரடி..!!