fbpx

காவல்துறையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5% இடஒதுக்கீடு..! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு..!

காவல்துறையில் முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முன்னாள் ராணுவ படை இணை இயக்குனர் மேஜர் வி.எஸ்.
ஜெயக்குமார் தமிழக அரசுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கு காவல்துறையில் இட ஒதுக்கீடு தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ”முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு மட்டும் 5சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும், முன்னாள் ராணுவ வீரர்கள் இளம் வயதில் ராணுவ படையில் இருந்து ஓய்வு பெறுவதால், வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வுக்காக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

காவல்துறையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5% இடஒதுக்கீடு..! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு..!

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, சிறப்பு விதிகளின்படி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டம் 2016 படி ‘ C பிரிவில் ‘ (சி பிரிவு என்பது இரண்டாம் நிலை காவலர் முதல் காவலர் வரை) 5 சதவீதம் முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு மட்டும் வழங்கி அனுமதி அளித்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் என மொத்தம் 3,552 காலிப் பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. தற்போது ஏற்கனவே அறிவித்த மொத்த காலிப் பணியிடங்களில், முன்னாள் ராணுவத்தினருக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

’தஞ்சையில் விமான சேவை அமைக்க நடவடிக்கை’..! மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

Tue Aug 2 , 2022
தஞ்சையில் பொதுமக்களுக்கான விமான சேவை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். இதுகுறித்து நேற்று மாநிலங்களவையில் திமுகவின் புதிய உறுப்பினரான எஸ்.கல்யாணசுந்தரம் எழுப்பிய கேள்வியில், ”தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பொதுமக்களுக்கான விமான சேவை கொண்டுவரும் திட்டம் அரசிடம் உள்ளதா? இல்லையெனில் அதன் காரணம் தருக. இதுவரையும் அதற்காக எதுவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?” எனக் கேட்டிருந்தார். இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை […]
மத்திய அரசின் திடீர் முடிவால் விமான கட்டணம் உயரும் அபாயம்..! பயணிகள் கவலை..!

You May Like