fbpx

“தாத்தா என்ன ஒன்னும் பண்ணாத” கெஞ்சிய 5 வயது சிறுமி; 60 வயது முதியவர் செய்த காரியம்..

உத்தரபிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 60 வயதான ஷேர் முகமது. இவர் வசித்து வரும் அதே பகுதியில், 5 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சிறுமியிடம் நைசாக பேசிய ஷேர் முகமது, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு நன்கு தெரிந்த தாத்தா என்பதால், சிறுமி அவருடன் வீட்டிற்க்கு சென்ற நிலையில், ஷேர் முகமது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

விளையாடிக் கொண்டிருந்த மகளை காணவில்லை என்று அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது ஷேர் முகமது, சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதை பெற்றோர் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுமியின் பெற்றோரை கண்ட முதியவர் அங்கிருந்து தப்பித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முதியவரை தேடிவந்தனர்.

ஆனால், பயத்தில் முதியவர் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Maha

Next Post

மீண்டும் விபத்தில் சிக்கிய ’குக் வித் கோமாளி’ மணிமேகலை..!! உருக்கமான பதிவு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Sun Oct 8 , 2023
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் பேராதரவு பெற்று விடுகின்றன. அந்தவகையில், ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’ உள்ளது. இந்த நிகழ்ச்சியை கூடுதல் சிறப்பாக்குவது குக்குகளை விட கோமாளிகள் தான். குறிப்பாக, கோமாளிகளான புகழ், பாலா, குரேஷி, சரத், ஜிபி முத்து, சுனிதா, மணிமேகலை என்று பலர் தங்களுடைய தனி ஸ்டைலில் செஃப் முதல் குக்குகள் வரை சரமாரியாக […]

You May Like