ரயில்வே அமைச்சகம் “TRAINS AT A GLANCE” (ரயில்கள் ஒரு பார்வை) என்ற புதிய காலநேர அட்டவணையை அக்டோபர் 1, 2022 அன்று வெளியிட்டது. இது இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான www.indianrailways.gov.in. –ல் இடம் பெற்றுள்ளது.புதிய காலநேர அட்டவணையின்படி சுமார் 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 130 சேவைகள் (65 இணைகள்) அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக அனைத்து ரயில்களின் சராசரி வேகம் சுமார் 5% அதிகரித்துள்ளது, மேலும் ரயில்களை இயக்குவதற்கு கிட்டத்தட்ட 5% கூடுதல் பாதைகள் கிடைக்க வழிவகுத்தது.2022-23 ஆம் ஆண்டில் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான இந்திய ரயில்வேயின் நேரமின்மை சுமார் 84% ஆகும், இது 2019-20 இல் எட்டப்பட்ட சுமார் 75% நேரத்தை விட 9% அதிகமாகும்.