கேரளாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவரைத் தேடி வந்த 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கேரளாவின் ஆற்றிங்கல் என்ற இடத்தில் உள்ள ஆற்றில் முதியவர் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தெர்மாக்கோல் அட்டைப் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்துள்ளார். அந்த பெட்டி முழுக்க 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் .
எல்லாருக்கும் ஒரு ஆசையிருக்கும் நம் வாழ்க்கையில் இப்படி ஒரு புதையலோ , ஒரு மிராக்கிலோ , அதிர்ஷ்டமோ நடக்காதா என்று.. அதைப்போல அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என நினைத்து அதை ஆற்றின் கரைக்கு கொண்டு சென்றார். பையில் சுற்றியிருந்த அந்த பணத்தை வெளியில் எடுத்துப் பார்த்தார்.
பணத் தாளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. இது சினிமா ஷுட்டிங் பயன்பாட்டிற்கு மட்டும் என அச்சிடப்பட்டிருந்தது.இதனால்அந்த முதியவர் ஏமாற்றம் அடைந்தார். எனினும் யார் இந்த பெட்டியை ஆற்றில் தூக்கி வீசினார்கள் என்பது புரியாத புதிராக இருந்தது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.