fbpx

ஒரு டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகள்..!! மொத்தம் 1,66,000 மரக்கன்றுகள்..!! பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா அறிவிப்பு..!!

ஐபிஎல் தொடரின் பிளேஆப் போட்டியில் டாட் பந்துகளுக்கு மரக்கன்றுகள் நடப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி நேற்று தனது 5-வது வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதல் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்ட இரு அணிகளாக சென்னை மற்றும் குஜராத் அணிகள் சிறந்து விளங்கின. இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலபரீட்சையாக நடந்த போட்டியில் சென்னை வெற்றியை பதிவு செய்தது.

பிளேஆப் சுற்று முதல் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆட்டத்தின் போது டாட் பந்துகளுக்கு பதிலாக மரம் வடிவிலான குறியீடு இடம் பெற்றிருந்தது. 4 போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 332 டாட் பந்துகள் கணக்கிடப்பட்டன. குவாலிபயர் ஒரு போட்டியில் மட்டும் 84 டாட் பந்துகள் கணக்கிடப்பட்டுள்ளன. நேற்றைய போட்டியின் டாட் பந்துகள் மற்றும் மரங்களின் எண்ணிக்கை குறித்து பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Tue May 30 , 2023
10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்தில் முடிந்துவிட்ட நிலையிலும், வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பு ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வெப்பசலனம் காரணமாக ஆங்ஆங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் […]

You May Like