மங்கோலியர்களின் “கிரேட் கான்” என்று அழைக்கப்படும் செங்கிஸ்கான் 1162ஆம் ஆண்டு ஓனான் ஆற்றின் கரையில் பிறந்தார். ஒட்டுமொத்த உலகையே நடுங்க வைத்தார்.. படையெடுத்து சென்ற இடங்கள் எல்லாம் பேரழிவையும், கடுமையான உயிர் சேதங்களையும் ஏற்படுத்திய செங்கிஸ்கான் அதன் மூலம் பல நகரங்களையும் தேசங்களையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
எதிரி எவராக இருந்தாலும் இரக்கமே காட்டாத இரத்த வெறி பிடித்த போர்வீரன். எந்த களத்தையும் தனக்கு சாதகமாக மாற்றி வெற்றி பெறக் கூடிய தந்திரசாலி. மேலும் இவர் செய்த செயல்களின் உலகின் கொடூர மன்னர்களில் ஒருவராக மாற்றியது. எனவே உலகில் அதிகளவில் மக்களை கொன்று குவித்த அரசனாகவும் அவ்ர் அறியப்படுகிறார்..
எதிரிகளை விரட்டி அடிப்பதும், அவர்களை நேசிப்பவர்களில் கண்ணீரைப் பார்ப்பதும் மகிழ்ச்சியான விஷயங்கள் என்பவர் செங்கிஸ்கான். எதிரியின் குதிரையில் சவாரி செய்வதும், அவர்களது மனைவிகளையும் மகள்களையும் தங்கள் கையில் வைத்திருப்பதை பெருமையாக உணர்ந்தார்.
செங்கிஸ்கானுக்கு 500-க்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவரின் மனைவிகள் எண்ணிக்கை எத்தனை என்பதை சரியாக கணிக்க முடியவில்லை.. அவர்களில் 6 பேர் மட்டுமே மங்கோலியர்களாக இருந்தனர்.. மற்ற அனைவரும் எதிரி நாட்டு மன்னர்களின் மனைவிகள் என்று கூறப்படுகிறது.. ஒவ்வொரு நாட்டை வெல்லும் போதும் அங்கிருக்கும் பெண்களை கவர்ந்து வந்து திருமணம் செய்து கொள்வாராம்..
எனினும் அவரின் முதன்மையான மனைவியாக இருந்த போர்டே என்பவருக்கு பிறந்தவர்களே மங்கோலிய ராஜ்ஜியத்தின் வாரிசுகளாக கருதப்பட்டனர்.. இன்று செங்கிஸ்கானின் வழிதோன்றல்கள் கோடிக்கணக்கில் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.. அதாவது ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 200 பேரில் ஒருவர் செங்கிஸ்கானின் வம்சத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்..