fbpx

ரூ.5,000 செலுத்தி அங்கீகாரம் புதுப்பிக்க பிப்ரவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 29.02.2024 நள்ளிரவு 11.59 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000/- மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000/- செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.02.2024. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணமா.?

Mon Jan 8 , 2024
நவீன காலகட்டத்தில் நம் உணவு பழக்கவழக்கங்களாலும், அன்றாடம் செய்யும் செயல்முறைகளாலும் பல வகையான நோய்களை எதிர்கொண்டு வருகிறோம். இவற்றை நாம் உண்ணும் உணவின் மூலம் மாற்றலாம் என்பது அனைவரும் அறிந்ததே. நம் முன்னோர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்ந்ததற்கு அவர்களின் உணவு பழக்க வழக்கங்களும், கடினமான உழைப்புமே காரணம். தற்போது ஜப்பானில் இந்திய முறைகளை பின்பற்றி பல உணவு பழக்க வழக்கங்களை மாற்றியுள்ளதால் நீண்ட ஆயுளை பெற்றுள்ளனர். அவை என்னென்ன […]

You May Like