fbpx

50,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!… தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு… முழுவிவரம் இதோ!

ஆந்திராவில் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி உறுதியளித்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள தொழில்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர பல்கலைக்கழகத்தின் இன்ஜீனியரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் தொடக்கவிழாவை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவன தலைவரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார். மாநாட்டில் உரையாற்றிய முகேஷ் அம்பானி, ஆந்திராவில் 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் சில்லறை வணிகம் மூலம் ஆந்திராவில் உருவாக்கப்படும் பொருட்களின் விற்பனை ஊக்குவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 20 செக்டர்களுக்கு 340 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்படவுள்ளதாகவும், இதனால் சுமார் 6 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதில் சிறப்புரையாற்றிய முகேஷ் அம்பானி, ஆந்திர மாநிலத்தில் 2002 இல் கண்டறியப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் உருவாக்கப்பட்ட KG-D6 இல் சுமார் 1,50,000 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், அந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் இந்தியாவின் சுமார் 30 சதவீத தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் கூறியுள்ளார். 98 சதவீத ஆந்திர மாநில வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையை முழுமையாக அடைந்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆந்திரா முழுவதும் ஜியோவின் ட்ரூ 5 ஜி சேவையை வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஆந்திராவில் 6,000 கிராமங்களில் உள்ள 1.2 லட்சம் மசாலா வியாபாரிகளுக்கு இயந்திரங்கள் விநியோகம் செய்து இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் சில்லறை வணிகம் மூலம் சுமார் 20,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

உடலுறவை மோசமாக கருதும் மக்கள்!... ஆடைகளுடன் தான் தாம்பத்தியம்!... முத்தம், சுயஇன்பத்துக்கு தடை! எங்கு தெரியுமா?

Sun Mar 5 , 2023
அயர்லாந்தின் கடலுக்கு நடுவே அமைந்துள்ள தீவுகளில் வாழும் பழங்குடியின மக்கள் பாலியல் உறவு முறைகளில் வித்தியாசமாகவும், விசித்திரமான கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வருவது ஆச்சரியத்தையும் சுவாரஸியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து நாட்டில் கடலுக்கு நடுவே பல தீவுகள் அமைந்துள்ளன. இதில், ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு தீவுகளிலும் வசித்து வரும் மக்களிடையே பழக்க வழக்கங்களில் வேறுபாடு உள்ளது. அந்தவகையில், அங்குள்ள தீவுகளில் ஒன்றான இன்னிஸ் பெக் என்ற தீவில் 350க்கும் […]

You May Like