fbpx

சிகிச்சை கிடைக்காமல் 50,000 கர்ப்பிணிகள் அவதி..!! 15 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலி..!! காசாவில் நடக்கும் உண்மைகள்..!!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடக்கும் யுத்தமானது தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆக்கிரமிப்பு தொடர்பாக நடந்துவரும் இந்த போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், பலியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இந்த போரில் பாலஸ்தீனியர்கள் சுமார் 3000 பேரும், இஸ்ரேலியர்கள் சுமார் 1400 பேரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இஸ்ரேலின் கோர தாக்குதலால், காசாவில் வாழும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் என்று ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஐநா சபை வெளியிட்டுள்ள தகவல்களின் படி, காசாவில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் அடுத்த ஒரு மாதத்தில் 5,500 பேருக்கு பிரசவம் நடக்கும் நிலையில், இருப்பதாக தெரிகிறது.

பாதுகாப்பான முறையில் குழந்தை பிறப்புக்கு கேள்விக்குறி எழுவதோடு, குழந்தை வளர்ப்பும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. காசாவில் ஒட்டுமொத்தமாக 25% வீடுகள் சிதைக்கப்பட்டுள்ளன. 59 மருத்துவமனைகள், 170 கல்வி நிலையங்கள், குடிநீர் மற்றும் சுகாதார நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதைவிட கொடூரம் என்னவென்றால், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு 1 குழந்தை பலியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதே உலக மக்களின் ஒற்றை வேண்டுகோளாக உள்ளது.

Chella

Next Post

திமுக மூத்த தலைவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு காலமானார்!... "துடிதுடித்து போனேன்" முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Sat Oct 21 , 2023
திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எம்எல்ஏவும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் நலக்குறைவால் காலமானார். கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கும்மிடிப்பூண்டி கே. வேணு. இவர் திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்துள்ளார். 1989, 1996 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1975ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மறைந்த […]

You May Like