ICSI நிறுவனத்தில் காலியாகவுள்ள 6 பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்சல்டன்ட் வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 50000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரிட்ரிஸ் இந்தியா நிறுவனத்தில் மெம்பராக இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். கன்சல்டன்ட் பணிக்கு விண்ணபிக்க விருப்பம் உள்ளவர்கள் 40 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 2 வருடங்களாவது முன் அனுபவம் இருக்க வேண்டும். காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் காண்ட்ராக்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த மாதம் ஆகஸ்ட் 22ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ICSI Placement Portal (https://placement.icsi.edu/) என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.