fbpx

CSK : சொந்த மண்ணில் 50வது வெற்றி!! மைதானத்தில் ரசிகர்களுடன் கொண்டாடிய சிஎஸ்கே நிர்வாகம்!

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் 50 வெற்றிகளை பதிவு செய்த 3வது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது.

CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 50 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே 50 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. சொந்த மண்ணில் 50 வெற்றிகளைப் பதிவு செய்த மூன்றாவது அணியாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது.

இந்த நிலையில் சேப்பாக்கத்தில் 50ஆவது வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்த சென்னை ரசிகர்களுக்கு சி.எஸ்.கே. சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதுவரை சொந்த மண்ணில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 52 வெற்றிகளும், மும்பை இந்தியன்ஸ் – 52 வெற்றிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் – 50 வெற்றிகளும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 42 வெற்றிகளும் ராஜஸ்தான் ராயல்ஸ் – 37 வெற்றிகளும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More: சொகுசு கார்… அதுவும் ரோல்ஸ் ராய்ஸ் கார் காவல்துறை வாகனமாம்…..

Baskar

Next Post

கரீனா கபூருக்கு கோர்ட் நோட்டீஸ்.... ரசிகர்கள் அதிர்ச்சி....

Mon May 13 , 2024
நடிகை கரீனா கபூருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ஹாலிவுட்டிலும் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சைப் அலி கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நடிகை கரீனா கபூருக்கு, மத்திய பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர், […]

You May Like