fbpx

52 கிராம் எடை குறைந்த பிஸ்கெட்!! பிரிட்டானியா நிறுவனத்துக்கு ரூ.60,000 அபராதம் விதிப்பு

குறைந்த எடை கொண்ட பிஸ்கெட் பாக்கெட்டை விற்பனை செய்த பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ.60,000 வழங்க நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் வாரக்கரையைச் சேர்ந்த ஜார்ஜ் தட்டில் என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, சக்கிரி ராயல் என்ற பேக்கரியில் இருந்து பிரிட்டானியா நிறுவனம் தயாரிக்கும் நியூட்ரி சாய்ஸ் தின் ஆரோ ரூட் வகையைச் சேர்ந்த இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை ரூ. 40க்கு வாங்கியுள்ளார்.

அவர், அந்த பிஸ்கெட் பாக்கெட்களை எடை போட்டபோது, ​​248 கிராம் என கண்டறியப்பட்டது. அதேநேரத்தில், அந்தப் பாக்கெட்டில் நிறுவனம் 300 கிராம் அடங்கிய பாக்கெட் என விளம்பரப்படுத்தி இருந்தது. இதையடுத்து ஜார்ஜ் தட்டில், திருச்சூர் நுகர்வோர் மாவட்ட குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணை முடிவுக்குப் பிறகு தீர்ப்பளித்த நுகர்வோர் குறைதீர் மன்றம், “இது ஒரு ஏமாற்றுச் செயல்” என்றதுடன், பொருட்களின் நிகர அளவை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள சட்ட அளவியல் துறைக்கு உத்தரவிட்டது. மேலும், எடை குறைந்த பிஸ்கெட் பாக்கெட்டை விற்பனை செய்ததற்காக பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மனுதாரருக்கு ரூ.50 ஆயிரமும், வழக்குச் செலவுக்காக ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Read More: Nayanthara | வல்லன் படத்தில் சிம்புவுடன் நயன்தாரா காட்டிய வித்தைக்கு இவ்வளவு சம்பளமா..?

Baskar

Next Post

Tn Govt: 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும்...!

Fri May 24 , 2024
நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 35,941 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரையுடன் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெயும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரேஷன் கடைகள் சரியான நேரத்தில் திறந்து பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க […]

You May Like