fbpx

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை..! 9,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்…! அமித் ஷா நடவடிக்கை…!

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் நிலமையை மாநில முதலமைச்சரிடம் விசாரித்தார்.

மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்த மோதல்‌ திடீரென வன்முறையாக மாறியது. பழங்குடி ஒற்றுமை நடைபயணம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது, இதனால் மோதல் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

மோதல் காரணமாக இதுவரை 9,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காவல் துறையோடு, ராணுவமும் அஸ்ஸாம் ரைபில்ஸ் படைப்பிரிவும் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மணிப்பூரின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, மிசோரம் சோரம்தங்கா மற்றும் அசாமின் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினார்.

Vignesh

Next Post

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்...!

Fri May 5 , 2023
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் அனுமன் பெயரை கூறியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது. பிரதமர் மோடி மே 2-ம் தேதி முதல் தனது தேர்தல் பேரணியில் வலதுசாரி அமைப்பான பஜ்ரங்தளை தடை செய்வதாக வாக்குறுதி அளித்ததற்காக காங்கிரசை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார், மேலும் தடையை பஜ்ரங்பாலி, பகவான் ஹனுமானுக்கு “பூட்டு” என்று பேசி இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி புதன்கிழமை […]

You May Like