பாகிஸ்தானில் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பெஷாவரில் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 59 வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் பலர் தினசரி பிரார்த்தனைக்காக கூடியிருந்த போலீஸ் அதிகாரிகள் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் முகமது அசிம் கூறுகையில், காயமடைந்தவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறினார். இது தற்கொலைத் தாக்குதலா அல்லது மசூதிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டதா என்பது இதுவரை தெளிவாகத் தெரியாத நிலையில் இந்த சம்பவத்திற்கு தலிபான்கள் பொறுப்பேற்பதாக கூறியுள்ளனர்.