fbpx

தமிழ்நாட்டில் மேலும் 4 மாவட்டங்களில் 5ஜி சேவை..!! அசத்திய ஏர்டெல்..!! எங்கெங்கு தெரியுமா..?

பாரதி ஏர்டெல் நிறுவனம், 125 நகரங்களில் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் ஏற்கனவே ஏர்டெல் 5ஜி இருந்தது. தற்போது கூடுதலாக சேலம், வேலூர், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இதனால் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையானது இப்போது மொத்தம் 265 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.

உங்கள் ஃபோனில் 5ஜி சேவையை எப்படி பெறுவது..?

முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்க் ஆப்புக்கு செல்லவும். அங்கு, ‘Wi-Fi & Networks’ ஆப்ஷனுக்குச் செல்லவும். சில ஃபோன்களில் அது நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட் அல்லது நெட்வொர்க் என இருக்கலாம். அடுத்து, சிம் அல்லது சிம் & நெட்வொர்க் ஆப்ஷனை டேப் செய்யவும். பேஜை கீழே ஸ்க்ரோல் செய்து, பின்னர் விருப்பமான நெட்வொர்க் வகை (ஃபேவரட் நெட்வொர்க் டைப்) ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்கள் ஸ்மார்ட்போன் 5G நெட்வொர்க் வசதி இருந்தால், 4G, 3G ஆகியவற்றுடன் 5G விருப்பத்தைப் பார்ப்பீர்கள். ஒருவேளை , ஃபோன் 5ஜி இல்லையெனில் என்றால், அதில் 5G ஆப்ஷன் இருக்காது. அதாவது உங்கள் தொலைபேசி 5G உடன் வேலை செய்யாது. உங்கள் போன் 5Gஐ ஆதரிக்கவில்லை என்றால், 5G இயக்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

Chella

Next Post

இம்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Thu Mar 9 , 2023
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிய நிலையில், இம்மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்பி தேர்வு எழுதி அரசு வேலைகளை பெற தமிழகம் முழுவதும் பட்டதாரிகள் தயாராக உள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி-யின் செயல்பாடு சமீபகாலமாக அதிருப்தியை […]

You May Like