fbpx

தமிழ்நாட்டில் 5ஆம் சுற்று பருவமழை ஆரம்பம்..!! டெல்டா விவசாயிகளே தயாரா இருங்க..!! வெதர்மேன் தகவல்..!!

தமிழ்நாட்டின் நாளை மறுதினம் முதல் ஐந்தாம் சுற்று பருவமழை தொடங்கும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஐந்தாம் சுற்று பருவமழை குறித்த தனது கணிப்புகளை டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “சுமத்ராவை ஒட்டிய தெற்கு வங்ககடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். அதுவரை தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தற்காலிக பனிப்பொழிவு நிலவும்.

தமிழ்நாட்டில் நாளை (டிச.14) வரை இரவில் குளிர்ந்த சூழலும், அதிகாலையில் பனிப்பொழிவும் காணப்படும் என்றும் பகல் நேரத்தில் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழல் நிலவும் என்றும் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வயல்களில் வடிகால்களைச் சீர் செய்வது, களைகளை அகற்றுவது போன்ற பணிகளைத் துரிதப்படுத்தலாம்.

டிசம்பர் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 5ஆம் சுற்று மழை தமிழ்நாட்டில் தீவிரமடையும் என்றும் குறிப்பாக, கடலோரம் நல்ல மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். டிசம்பர் 4-வது வாரத்தில் 6-ம் சுற்று மழையும் நல்ல மழைப்பொழிவைக் கொடுக்கும். தமிழக விவசாயிகள் அதற்குள் களைக்கட்டுப்பாடு, பூச்சிக்கட்டுப்பாடு, உரமிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். குளிர்கால பயிர் (நிலக்கடலை, சோளம், பருத்தி, உளுந்து, தர்பூசணி) விதைப்பு பணிகளைத் திட்டமிடும் கடலோரம் – கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்ட விவசாயிகள் விதைப்பு பணிகளை அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

கேரளாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..!! மருத்துவமனைகளில் குவியும் மக்கள்..!!

Wed Dec 13 , 2023
கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் […]

You May Like