தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மொத்த வாக்காளர்களில் ஆண்கள் 3.03 கோடியும், பெண்கள் 3.14 கோடியும் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.60 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் இப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என்றும், இனிமேல் கூட வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்கள் சேர்க்கப்படும் எனவும் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.