fbpx

Election: பெண் வேட்பாளர்களே இல்லாத 6 தொகுதிகள்!… 39 தொகுதியில் 3ம் பாலினத்தவர் ஒருவர் கூட போட்டியில்லை!

Election: தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 6 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர்கள் கூட போட்டியிடவில்லை. இதேபோல், 39 தொகுதியிலும் 3ம் பாலினத்தவர் ஒருவர் கூட போட்டியிடவில்லை.

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் வேட்புமனு தாக்கல் 25-ம் தேதி தொடங்கியது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் யார் யார் போட்டியிட உள்ளார்கள் என்ற விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 பேர் தங்களது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 59 வேட்பாளர்களும் குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 9 பேரும் தமிழகத்தில் போட்டியிடுகின்றனர்.

இதேபோல், மத்திய சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பொள்ளாச்சி, தஞ்சாவூர் ஆகிய 6 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர்கள் கூட போட்டியிடவில்லை. மேலும் 39 தொகுதிகளிலும் மாற்று பாலினத்தவர் ஒருவர் கூட போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: மக்களே!… இன்றே கடைசி நாள்!… சேமிப்பு திட்டம் முதல் மானியம் வரை!… இதையெல்லாம் செய்துவிட்டீர்களா?

Kokila

Next Post

பரபரப்பு...! TASMAC கடைய எப்ப மூட போறீங்க...? உதயநிதியை சுற்றி வளைத்த பெண்கள்...!

Sun Mar 31 , 2024
டாஸ்மார்க் கடைகளை எப்பொழுது மூடுவீர்கள் என பெண்கள் அமைச்சர் உதயநிதி இடம் கேள்வி எழுப்பியுள்ளனர். காஞ்சிபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடும் நிதி நெருக்கடியின்போது திமுக ஆட்சிக்கு வந்தது. கொரோனா தடுப்பூசி குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். இலவச பஸ் திட்டத்தால், பல பெண்கள் பயன் பெற்றுள்ளனர். மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட […]

You May Like