fbpx

சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது- 6 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஒடிசா மாநிலம் பாலசோர் எனும் இடத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கம்- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்  ஆகியவற்றுக்கு இடையே தினசரி அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 7 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்து வனப்பகுதியில்  நடந்துள்ளதாலும், இரவு நேரம் என்பதாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. புவனேஷ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  தேசிய பேரிடர் மீட்பு படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த நிலையில் அவசர கால கட்டுப்பாட்டு எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து அறிந்துகொள்ள +91 67822 62286 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Rupa

Next Post

போலீஸ் பூனை இருக்கா?... எலான் மஸ்க் மகனின் கேள்வியும்!... டெல்லி காவல்துறையின் ஜாலி பதிலும்!

Sat Jun 3 , 2023
போலீஸ் நாய் போல், போலீஸ் பூனைகள் உள்ளதா என்ற தனது மகன் கேட்ட கேள்வி குறித்த எலான் மஸ்க் பதிவிட்டிருந்த ட்வீட்க்கு டெல்லி காவல்துறை ஜாலியாக பதிலளித்துள்ளது. உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனது மகன் லில் எக்ஸ் என்னிடம், போலீஸ் நாய்களை பார்த்த பிறகு, போலீஸ் பூனைகளும் உள்ளதா என கேட்டார்?” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு டெல்லி போலீஸ் […]

You May Like