fbpx

6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு..!! சிறையிலிருந்து வெளிவருகிறார் சவுக்கு சங்கர்..!!

பிரபல அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் குறித்து அவதூறாக விமர்சித்த சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் சிறையிலேயே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு காரணமாக சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று மாலை வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு..!! சிறையிலிருந்து வெளிவருகிறார் சவுக்கு சங்கர்..!!

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், சிறை தண்டனைக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த மனு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் சவுக்கு சங்கர் தெரிவிக்கக் கூடாது என நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

Chella

Next Post

திருமணத்திற்கு அவகாசம் கேட்ட இளம்பெண்..!! வெறியான காதலன்..!! வெறுப்பான காதலி..! வெட்டி சாய்த்த கொடூரம்..!!

Fri Nov 11 , 2022
திருமணத்திற்கு மறுத்த காதலியை அவரது தாய் கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே சித்தார்த் நகரில் வசித்து வந்தவர் ஸ்வேதா (26). ஸ்வேதாவின் உறவுக்கார பையன் பிரதீக் கிசான். இவர் பொறியியல் படிப்பு முடித்து, தண்ணீர் கேன் கம்பெனி நடத்தி வந்துள்ளார். ஸ்வேதா-பிரதீக் கிசான் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வீட்டில் தங்களது காதலை சொல்லியபோது, […]
திருமணத்திற்கு அவகாசம் கேட்ட இளம்பெண்..!! வெறியான காதலன்..!! வெறுப்பான காதலி..! வெட்டி சாய்த்த கொடூரம்..!!

You May Like