fbpx

தீபாவளி பண்டிகைக்கு தரமாக வெளியாகும் 6 திரைப்படங்கள்..!! கோலிவுட் முதல் பாலிவுட் வரை..!! லிஸ்ட் இதோ..!!

ரஜினியின் வேட்டையன், லப்பர் பந்து உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. அதுவும் வேட்டையனை விட லப்பர் பந்துக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தன. இந்நிலையில், இந்த தீபாவளி பண்டிகைக்கு சரவெடியாக கோலிவுட் முதல் பாலிவுட் வரை கிட்டத்தட்ட 6 படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. அவ்வாறு பெரிதும் எதிர்பார்க்கும் படங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படம் தான் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் லக்கி பாஸ்கர் படமும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகிறது.

அடுத்ததாக ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடிப்பில் கலகலப்பாக உருவாகி இருக்கிறது பிரதர் திரைப்படம். சரண்யா பொன்வண்ணன், பூமிகா, நட்டி நடராஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும், வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவினின் பிளடி பகர் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்துள்ளார். இப்படத்தில் கவின் பிச்சைக்கார தோற்றத்தில் இருப்பதால் படம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நவம்பர் 1ஆம் தேதி அஜய் தேவகன், அக்ஷய்குமார், தீபிகா படுகோன், டைகர் ஷெராப் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் சிங்கம் எகைன் படம் வெளியாகிறது. இந்த படத்திற்காக பாலிவுட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன்,‌ திரிப்டி திமிர், வித்யா பாலன், மாதுரி தீட்சித் ஆகியோர் நடிப்பில் பூல் புலையா 3 படம் வெளியாகிறது. ஆகையால், இந்த தீபாவளி கொண்டாட தியேட்டரில் தரமான படங்களை வெளியாகிறது.

Read More : இவர்களுக்கு இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை..!! மத்திய அரசு அதிரடி..!!

English Summary

Almost 6 films from Kollywood to Bollywood are releasing in theaters this Diwali festival.

Chella

Next Post

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது மீண்டும் சர்ச்சை.. தேவையில்லாமல் பிரச்சனை ஆக்கிடாதீங்க..!! - உதயநிதி ஸ்டாலின்

Fri Oct 25 , 2024
Deputy Chief Minister Udhayanidhi Stalin explained that the Tamil Thai greeting was repeated due to a microphone malfunction.

You May Like