ஜிம்பாப்வேவின் ஸ்வாமஹண்டே பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் இந்தியாவின் வைர சுரங்க அதிபர் ரந்தாவா மற்றும் அவரின் மகன் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தங்கம், நிலக்கரி, நிக்கல், தாமிரம் ஆகியவற்றைச் சுத்திகரிக்கும் சுரங்க நிறுவனமான RioZim-ன் உரிமையாளர் ரந்தாவா, அவரின் மகன், விமானி உட்பட ஆறு பேர், செஸ்னா 206 ரக விமானம் ஹராரேயிலிருந்து முரோவா வைரச் சுரங்கத்திற்குச் சென்று கொண்டிருந்தது என கூறப்படுகிறது. ஜிம்பாப்வேவின் ஸ்வாமஹண்டே பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
நடு வானிலேயே விமானம் வெடித்ததாகவும், அதன் பின்னர் தரையில் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த RioZim-ன் உரிமையாளர் ரந்தாவா, அவரின் மகன், விமானி உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் உயிரிழந்த வைர சுரங்க அதிபர் ஹர்பால் ரந்தாவா 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனியார் பங்கு நிறுவனமான GEM ஹோல்டிங்ஸின் நிறுவனர் ஆவார்.